பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99
கோடி கோடி இன்பம் தரவே!
தேடி வந்த செல்வம்!
கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென
ஆட வந்த தெய்வம்!


பாடும் பாட்டின் பாவம் தன்னை
பார்வை சொல்லிடவே!
ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம்
அசைந்தே துள்ளிடவே!
முழு நிலவென அழகு மலரென
முகங் காட்டியே பருவம்ங்கை உருவாய் (கோடி)


வாடும் பயிரை வாழச் செய்ய
மேகம் வந்தது போல்
வாச மலரும் அன்பினாலே
தேனைத் தந்தது போல்
கனிமொழியுடன், கருணை விழியுடன்
களிப்பூட்டவே கலைஞானவடிவாய் (கோடி}
ஆடவந்த தெய்வம்-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : T. R. மகாலிங்கம்