பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112


ஆண் : அன்பே அமுதே! அருங்கனியே!
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே!
எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே!
இன்பமும் தந்தாயே! கொஞ்சும் கிளியே!
கன்னல்மொழிபேசி கண்ணால் வலைவீசி!
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி!


பெண் : என்ன தவம் செய்தேன் கண்ணா!
உன்னுடன் உறவாட ஆசை மன்னா!


ஆண் : இருவரும் ஒன்றானோம்!
மதுவுண்ணும் வண்டானோம்!


பெண் : சுவாமி!


ஆண் : கண்ணே!


பெண் : இதுவே பேரின்பம்!


உத்தமபுத்திரன்-1958
இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P.சுசிலா