பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
117


பெண் : வச்ச பயிரு வளர்ந்தாச்சு!
வளர்ந்த பயிரு கதிராச்சு!
அதன் பலனை நாமடைந்து
ஆனந்தமா வாழ்ந்திடணும்!
எல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்!
இதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்!
நல்ல நாளாப் பாத்து வீட்டுக்கு வந்து
பாக்கு வெத்தலை மாத்துங்க மச்சான்!


ஆண் : வயலுக்கு ஒரு வரப்பாவேன்!
வாழ்க்கைக்கு நான் துணையாவேன்!
கால நேரம் பாத்துக்கிட்டுக்
கல்யாணத்தை வச்சுக்குவோம்!
மருத மலை முருகனுக்கு
மாவிளக்கு போட்டிடுவோம்!
வேலவனை நாம் துதிப்போம்
வேண்டியதை அவன் கொடுப்பான்!
தாய்மீது சத்தியம்-1978
இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & P. சுசீலா