பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
161


பெண்: கண்ணாலே நான் கண்ட கணமே!-உயிர்க்
காதல் கொண்ட தென் மனமே! இது
முன்னாளில் உண்டான உறவோ-இதன்
முடிவும் எங்கோ? எதுவோ?
ஆண் : எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே!-இது
முன்னாளில் உண்டான உறவோ?-இதன்
முடிவும் எங்கோ எதுவோ?
பெண்: யாரென்று கேட்காததேனோ?
யாரானால் என்னென்றுதானோ?
நேராக நின்று யாரென்று கேட்டால்
கூரான வேல் பாயும் என்றோ?
ஆண் : யாரான போதென்ன கண்ணே!
நானுண்ணும் ஆனந்தத் தேனே!
நீ வேறு அல்ல! நான் வேறு அல்ல!
வேறென்ன நானின்னும் சொல்ல!-இனி
எந்நாளும் நீ இங்கு எனக்கே!
பெண் : என் இதயமெல்லாம் உமக்கே!
பார்த்திபன் கனவு-1960
இசை : வேதா
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & சுசிலா