பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166


கள்ள மலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே!
சொல்லுமின்றி மொழியுமின்றி மெளனமாகப் படித்தாள்!
உள்ளமதைக் குருவுக்கவள் காணிக்கையாய்க் கொடுத்தாள்!
துள்ளியெழும் ஆசையால் தூக்கமின்றித் தவித்தாள்!
கொள்ளையிட்ட கள்வனுக்கு மாலை போடத்துடித்தாள்!
(கள்ள)
அன்புக் கைகள் அணைப்பிலே ஆசை தீரும் பொன்னாள்!
இன்ப மென்னும் உலகினிலே இணைந்து வாழும் நன்னாள்!
என்று வரும் என்று வரும் கனவு காணும் அந்நாள்!
என்று எண்ணி ஏங்குகிறாள் அன்னநடைப் பெண்ணாள்!
(கள்ள)
குலமகள் ராதை-1963
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா