பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
181
ஆண் : பார்த்தேன் பார்க்காத அழகே!
கேட்டேன் கேட்காத இசையே!
பெண் : பார்க்கும் அழகென்ன அழகோ?
கேட்கும் இசையென்ன இசையோ?
ஆண் : நான் பாட நீயாட சபை யேறலாம்!
ரதியாக மதனாக உறவாடலாம்!
பெண் : உறவாடும் எண்ணம் மனம் கொள்ளலாம்!
உனைத்தேடி வரும்போது அதைச் சொல்லலாம்!
ஆண் : நதியோடு நதி சேரும் கடலாகலாம்!
புதுப்பாதைதனில் சேர்ந்து நடைபோடலாம்!
பெண் : என்பாதை வேறு உன்பாதை வேறு!
இருவேறு நேர்க்கோடு இணையாதது!
கெட்டிக்காரன்-1971
இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன், P. சுசிலா