பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
192
ஒயிங்கு தவறாமெ!
ஊரெ எத்தி வாயாமெ
பொயிதெ வீணாக்காமெ
புவ்வாவத் தேடிக்கனும்!
ஆனாக்க அந்த மடம்
ஆவாட்டி சந்தெமடம்!
அதுவும் கூட இல்லாகாட்டி
ப்ளாட்டுபாரம் சொந்த இடம்!(ஆனா)
மச்சுலே இருந்தாத்தான்
மவுசுயிண்ணு எண்ணாதே!
குச்சுலே குடியிருந்தா
கொறச்சலுண்ணு கொள்ளாதே!
மச்சு குச்சு எல்லாமெ
மனசுலே தானிருக்கு!
மனசு நெறஞ்சிருந்தா
மத்ததும் நெறஞ்சிருக்கும்!(ஆனா)
கெடைச்சா கஞ்சித்தண்ணி!
கெடைக்காட்டி கொயாத்தண்ணி!
இருக்கவே இருக்கையிலே
இன்னாத்துக்குக் கவலை கண்ணி!