பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197

தொகையறா

ஆண் : மந்தரையின் போதனையால் மனம் மாறிகைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்!
வஞ்சகச் சகுனியின் சேர்க்கையால் கெளரவர்கள்
பஞ்ச பாண்டவரை பகைத்தழிந்தார்!
சிந்தனையில் இதையெல்லாம் சிறிதேனும் கொள்ளாமல்
மனிதரெல்லாம் மந்தமதியால் அறிவு மயங்கி
மனம் போன படி நடக்கலாமா?

(பாட்டு)

கோரஸ் : ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே!
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே!(ஒற்)
உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாடமே
அணையாத தீபமாய்ச் சுடர் என்றும் வீசுமே
ஆண் : நெஞ்சில்-உண்டான அன்பையே
துண்டாடி வம்பையே
உறவாகத் தந்திடும்
சிலர் சொல்லை நம்பியே
இருவரும் : வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!
கோரஸ் : ஒற்றுமையாய் !!