பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
199
கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மையில்லாதது! அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்!
அடையாளம் காட்டும்! பொய்யே சொல்லாதது!
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
கண்முன்னே தோன்றுவது சாத்தியமே!
காத்திருந்து கள்வருக்குக் கை விலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்குத் தோணாத சத்தியமே!
போடும் பொய்த் திரையைக் கிழித்து விடும் காலம்!
புரியும் அப்போது மெய்யான கோலம்!(கண்)
ஒம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க:
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க!
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை!
உண்மை எப்போதும் தூங்குவது மில்லை!(கண்)
பொன் பொருளைக் கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டுக்
கண்மூடி போகிறவர் போகட்டுமே!
என் மனதை நானறிவேன்!