பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13அவனுக்கும், கா. மு. ஷெரீஃப் அவர்களுக்கும் "திரு, லோகநாதன் அவர்கள் பாடிய உங்கள் பாடல்களைக் கேட்டோம். திருப்தியாக இருந்தது உடன்வந்து சேரவும்" என்று தந்தியும், லெட்டரும் வந்தது. அவனும், கா. மு. ஷெரீப் அவர்களும் அங்கு சென்றார்கள். அப்பொழுது அண்ணன் M. A. வேணு அவர்கள் அங்கு தயாரிப்பு நிர்வாகி, இசையமைப்பாளர். அத்துறையில் மாபெரும் மேதையான அண்ணன் G. ராமனாதய்யர் அவர்கள் அவர்களை, அவன் மெட்டுக்குப் பாட்டெழுதி, திருப்தியடையச் செய்தான். T. R. மகாலிங்கம். அஞ்சலிதேவி நடித்த "மாயாவதி" என்ற படத்தில் உள்ள "பெண் எனும் மாயப்பேயாம்" என்ற பாடலுடன் அவனுடைய திரையுலகப் பணி ஆரம்பமாயிற்று. ஒரே கம்பெனியில் இருந்து வந்திருந்ததால், வேற்றுமையில்லாமல் ஒவ்வொரு பாடலும் கா. மு. ஷெரீஃப், மருதகாசி என்ற தலைப்பிலேயே வெளிவந்தது.


"மந்திரி குமாரி" கதையை மாடர்ன் தியேட்டர்ஸார் வாங்கிப் படமாக்க வகை செய்தான். M. A. வேணு அவர்களின் அரவணைப்பால் அவனது கலைப்பணி நன்கு வளர்ந்தது "பொன்முடி" படத்தைப் பார்த்த "பாகவதர்" அவர்களால் G. ராமனாதய்யர் மூலம் சென்னைக்கு அழைக்கப்பட்டான், அங்கு அவனது நண்பரான ஒளிப்பதிவாளர் திரு. R. M. கிருஷ்ணசாமி அவர்கள், தனது நண்பர்களான V.C. சுப்பராமன், ராதாகிருஷ்ணன் அவர்கள் கூட்டுறவுடன் ஞானமணி அவர்களின் இசையமைப்பில் "ராஜாம்பாள்" என்ற படத்திற்குப் பாடல் எழுத அழைத்தார்.


அன்று முதல் அவன் கலைப்பணி தொடர்ந்தது. மெட்டுக்கேற்பப் பாடல்கள் எழுதும் அவனது திறமை பல தயாரிப்பாளர்களையும் இசையமைப்பாளர்களையும் அவனை அழைக்கச் செய்தது. அனைத்துச் சந்தர்ப்பங்களும் அவனைத் தேடி வந்தனவே தவிர, அவன் சந்தர்ப்பங்களைத் தேடவில்லை. அந்தப் பாடலாசிரியன் தான் மருதகாசி. இனி அவனது அனுபவம் பேசுகிறது.

А