பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
209
(பல்லவி)
எல்லாம் திரை மறைவே--உலகில்
எல்லாம் திரை மறைவே


கல்வி இருந்தென்ன கற்பனை இருந்தென்ன
கண்டு ரசிக்க கண்களில்லாதவ்ர்க்கு
(எல்லாம்)


கற்றுக் கொடுக்காத கவி வாணரின் புலமை
கஞ்சத் தனமுடையோன் காக்கும் பணப் பெருமை
கவைக்குதவாப்படிப்பு உணர்ச்சியில்லா நடிப்பு
கதிரவன் ஜோதி முன்னே குடத்தில் இட்ட விளக்கு
(எல்லாம்)


ஆடம்பரம் இல்லா அறிவாளி நாவன்மை
அவனியை உருவாக்கும் தொழிலாளி கைவன்மை
நாடிக்கடல் கலந்த நதிநீரின் நல்ல தன்மை
நன்றியில்லா தவர்க்கு செய்த செய்த நன்மை
(எல்லாம்)


பிறந்த நாள்-1982
இசை: K. V. மகாதேவன்