இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
211
- நம்ம சரக்கு ரொம்ப நல்ல சரக்கு!
- நாணயமும் நம்பகமும் உள்ள சரக்கு!
- ஸ்டாரு படம் போட்டிருக்கு பின்னாடி-இது
- சிறந்த பெல்ஜியம் கண்ணாடி!-நீ
- சிரிச்சா சிரிக்கும் அழுதா அழுவும்
- சிந்திச்சுப் பாரு இதன் முன்னாடி!
- அறிஞர் கலைஞர்கள் அருமைக் கவிஞர்கள்
- அறிவை உலகில் தரும் பேனா!-நல்ல
- இருதயமில்லாத மனிதருக்கு இது
- ஈட்டிமுனையாகும் சொல்லப் போனா!
- கெட்டதைப் பாக்காதே கேக்காதே பேசாதே!
- கேடுகெட்டுப் போகாதே மனக்குரங்கே!-அது
- கட்டுப்பாடு, கண்ணியம் கடமையைக் கொல்லுமின்னு
- வெட்ட வெளிச்சமாச் சொல்லுது இங்கே!
- இதோ பாரு தஞ்சாவூரு தலையாட்டி பொம்மை!
- இழுத்தபக்கம் சாயுறது இதனுடைய தன்மை!
- இதைப் போலச் சிலமனிதர் இருக்கிறதும் உண்மை!
- எண்ணிப் பார்த்தா அதுகளெல்லாம் நடமாடும் பொம்மை
தேடிவந்த செல்வம்-1958
- இசை: லிங்கப்பா