பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
213

  (தொகையறா)

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்!
உயர் பதவி காணுகின்றார்!
உண்மையே பேசிடும் உத்தமர்கள் ஓயாத
துயராலே வாடுகின்றார்!

பாட்டு

புவி மீதினில் நீதி புகைந்ததே!
பொய், பாபமும், குதும் மலிந்ததே!
பணப்பேயதன் முன்னே சட்டமெல்லாம்
பணிந்தாடுதே இன்று பாரினிலே!
கனல் மீதினில் புழுவாய் ஏழைகளே!
கண்கலங்கியே வாடித் திண்டாடுறார்!
அநியாயமிதே! அழியாததேன்?
இதை அழித்திடுவாரே இல்லையா?
பொதுமேடையில் ஏறிப் பேசுகிறார்-தாம்
பொதுநலத் தொண்டன் என்கிறார்
அதிகாரமும் கையில் வந்தவுடன்
அநியாயமும் செய்கின்றார் கண்மூடியாய்!
மனத்துாய்மையுடன் எல்லோருமே
வாழ்ந்தால் அன்றி நிலையும் மாறுமோ?
பாபமும் சூதும் மலிந்ததே!
பாபம் மலிந்ததே! மலிந்ததே!
ராஜாம்பாள்-1951’'
இசை: ஞானமணி