பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
223
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்!
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்!
(திரு)
திருவிழா ஊருக் கெல்லாம் சிங்காரம்-நம்
திருநாட்டின் பெருமைக்கு இதுவேதான் ஆதாரம்!
(திரு)
"இல்லறமே நல்லறமாய் வாழுங்க"-என்ற
வள்ளுவரை வாசுகியைப் பாருங்க!
தெள்ளமுதாம் நீதிமொழி தன்னையே-நமக்கு
அள்ளித் தந்த பாட்டி இந்த ஒளவையே!
(திரு)
சதிபதிகள் இணைந்தது சம்சாரமே!-அதில்
தனிமை வந்தால் இன்பநிலை மாறுமே!-எனும்
தத்துவத்தைச் சொன்ன வேதநாயகன்!-சொல்லின்
நித்தியத்தை உணரவேணும் யாருமே!
(திரு)
மனமுள்ள மறுதாரம்-1958
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா