பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

255


அன்பினாலே உண்டாகும் இன்பநிலை! அதை
அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை! (அன்)
சொந்தமென்னும் உறவுமுறை நூலினாலே!-அருட்
சோதியான இறைவன் செய்த பின்னல் வேலை! (அன்)
தன்னை மறந்தாடும் சிலையே!
சங்கத் தமிழ் பாடும் கலையே!
சிலையே கலையால் நிலையே
குலைந்தாய் உண்மையிலே!
உளமிரண்டும் நாடி
உறவே கொண்டாடி
கனிந்து முதிர்ந்த காதல் தனை
நினைந்து மனம் உருகிடுது வாழ்வினிலே!      (அன்)
கொஞ்சு மொழிக் குழந்தைகளைப் பிரிந்த போது! நல்ல
குலவிளக்காம் மனைவிதன்னை இழந்தபோது!
தம்பி தன்னைப் பறிகொடுக்க நேர்ந்த போது!
சம்சாரம் எல்லாம் அழிந்த போது வாழ்வில் ஏது!

(அன்)

பாசவலை–1956
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்: C. S. ஜெயராமன்