பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
256

:ஆண்: ஆத்திலே தண்ணி வர

அதில் ஒருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக்
கவ்விக்கொண்டு போவது ஏன்?
கண்ணம்மா! அதைப்
பாத்து அவன் ஏங்குவதேன்? சொல்லம்மா!
பாத்தி கட்டி நாத்து நட்டு
பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன்
பாத்தியமாய் போவது ஏன்? கண்ணம்மா! கலப்பை
புடிச்சவனும் தவிப்பது ஏன்? சொல்லம்மா!
பெண்: னன்னானே னானே னானே
னானே னன்னானே
னன்னானே னன்னானே. னானே னன்னானே
ஆண்:பஞ்செடுத்து பதப்படுத்தி
பக்குவமாய் நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்வோன்
கண்ணம்மா!.இங்கு
கந்தலுடை கட்டுவதேன்?
சொல்லம்மா!