பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
257


காத்திருக்கும் அத்தை மவன்
கண் கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு
மாத்து மாலை போடுவதேன்
கண்ணம்மா!-அவள்
நேத்திரத்தை பறிப்பது ஏன்?
சொல்லம்மா?
பெண்: ணன்னானே.....
ஆண்: ஏற்றத்தாழ்வும் ஏமாற்றும்
இவ்வுலகில் இருப்பது தான்
இத்தனைக்கும் காரணமாம்
கண்ணம்மா! இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா!
(ஆத்தி)
பெண்: னன்னானே...
ஆண் : கண்ணம்மா! சொல்லம்மா!
கண்ணம்மா சொல்லம்மா!
கண்ணம்மா! வ...வ...வண்ணம்மா!
வண்ணக்கிளி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்