பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
263


என்னைத் தெரியலையா?
இன்னும் புரியலையா?
குழந்தை போலே எம்மனசு-என்
வழியோ என்றும் ஒரு தினுசு! (என்னைத்)
அழகை ரசிப்பதில் கவிஞன் நான்!
அன்பு காட்டினால் அடிமை நான்!
பழகும் தன்மையில் பண்புள்ள தமிழன்!
பரந்த நோக்கம் உள்ளவன் நான்!(என்னைத்)
காதல் பாதையில் கம்பன் மகன்!
கன்னி தான் இன்னும் கிடைக்கலே!
கவலை ஏதுமே இல்லாத மனிதன்
சிரிக்க வைப்பதில் வல்லவன் நான்! (என்னைத்)
அனுபவப் படிப்பில் முதிர்ந்தவன் நான்!
ஆசைத் துடிப்பிலே வாலிபன்!
என்னையறிந்தோர் எல்லோர்க்கும் நண்பன்!
இரக்க சிந்தை உள்ளவன் நான்! (என்னைத்)
யாருக்கு சொந்தம்-1963
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: சந்திரபாபு