பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19

எழுதச் சொன்னார்கள். வெறும் ஊர்ப் பெயர் வந்தால் போதாது, கதை 'விவசாயி'யைப் பற்றியது. அதனால், அந்தத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத வேண்டும் என்று எழுதிய பாட்டுத்தான் "மணப்பாறை மாடுகட்டி" என்று தொடங்கும் பாடல். அதே சமயத்தில், திரு. A K வேலன் அவர்களின் வெற்றிப் படமான "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற படத்திற்கு "நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு" என்ற பல்லவியை எழுதிக் கொண்டிருக்கும்போது, நண்பர் வயலின் மகாதேவன் M.M. புரொடக்‌ஷன் என்ற கம்பெனி ஆரம்பிக்க வேண்டிய பங்குதாரர், பத்திரங்களுடன் வந்து கையெழுத்துப் போடுமாறு கேட்டார். முதலில் மறுத்தேன். பிறகு A.P.Nன் வற்புறுத்தலால் ஒப்புக் கொண்டேன்.

பல காரணங்களால், படம் வெளியிட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், நானும் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனும் அந்த "அல்லி பெற்ற பிள்ளை" என்னும் படத்தினால் அடைந்த தொல்லைக்கு அளவேயில்லை. இடையில், எத்தனையோ சம்பவங்கள். அன்றைய மக்கள் திலகம், புரட்சி நடிகர், இன்றைய முதல்வர் திரு. M. G. R. அவர்களுக்காக, என்னை அழைத்து, தேவர் அண்ணன் அவர்களால் எழுதி வாங்கப்பட்ட, புரட்சிகரமான கருத்துள்ள, முதல் பாடல் "மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே" என்பதாகும்.

இடையில் மூன்று நான்கு ஆண்டுகள் நான், சேலத்திற்குப் போகவில்லை. அய்யா உடுமலையார் அவர்களை "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்திற்குப் பாடல் எழுதச் செய்ய, உயர்திரு. பாலு முதலியார் அவர்களும், சுலைமான் அவர்களும் வந்திருந்தார்கள். அப்பொழுது அய்யா அவர்கள். "நேஷனல் பிக்சர்ஸ்" ரத்தக் கண்ணீர் படத்திற்கு இந்தி ரிக்கார்டு டியூனுக்குப் பாட்டு எழுத, என்னைத் துணை புரிய அழைத்திருந்தார். அய்யா, அவர்களுடன்