பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
269பெண்ணெனும் மாயப்பேயாம்-பொய்மாதரை
என் மனம் நாடுவேனோ-அழகினால் உலகமே அழியும்
மின் விழிப்பார்வை நோயால்-மெய்யறிவு
தன் நிலை மாறுவேனோ?
கன்னியர் காமத்தீயாம்-பொய்க்கானலில்
வெந்துடல் வாடுவேனோ?
புன் மொழி மாதை நானே-எண்ணியே
பொய் வழி சேருவேனோ?
பெண்களைப் பேணுவார்தாம்-பின்னாளிலே
விண்ணினைக் காணுவாரோ?
உண்பதோ காயை வீணே!-இங்கெவரும்
உண்ணுவார் தீங்கனியே!
அண்ணலைப் பாடுவேனே-மெய்ப்பேரின்ப
நன்னிலை நாடுவேனே!
சம்புவின் நாமமதே பணிந்திட
பந்தமதே நீங்குமே!
மாயாவதி-1949

இசை : G. ராமநாதன்

பாடியவர்: T. R. மகாலிங்கம்