பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
274

(தொகையறா) யாருக்குத் தீங்கு செய்தேன்? யார் குடியைக் கெடுத்தேன்? யார் பொருளை அபகரித்தேன்? சீரோடு வாழ்ந்த என்னை வேரோடு அழித்தது ஏன்? தெய்வமே! இது நீதியா? (பாட்டு) கண்ணில்லையோ? மனமில்லையோ? கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ? கருணைக் கடல் என்பதெல்லாம் பொய்யோ? கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ? (கண்) எண்ணமும் கனவாகி இடி மின்னல் மழையாகி கண்களும் கண்ணிர் கடலானதே! மங்கல வாழ்வும் பறிபோனதே! துயர் சூழ்ந்த என் வாழ்வில் புயல் வீசலாமோ? உயிரோடு எனை வைத்து வதைசெய்யலாமோ?(கண், என்னைப் படைத்ததும் ஏன்? இன்பங் கொடுத்ததும் ஏன்? .." இது போலே பாதியிலே தட்டிப் பறித்ததும் ஏன்? அன்பை வளர்த்ததும் ஏன்? - ஆசையைத் தந்ததும் ஏன்? துன்ப மெனும் நெருப்பாற்றில் எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்? (கண்)