பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
276

ராஜீ: எங்கே?...... எங்கே?........ நீ எங்கே? குங்குமச் சிமிழே கோபுரவிளக்கே! தங்கக் கலசமே! தாமரைப் பூவே! (எங்கே) திருமுகத்தின் அழகை நிலாதிருடிச் சென்றதோ? செவ்விதழைக் கொவ்வைக் கனி கவ்விக் கொண்டதோ? கருவிழிகள் புள்ளி மானைக் கலந்து கொண்டதோ? என் கண்பட்டுத்தான் காலம் உன்னைக் கவர்ந்து சென்றதோ? (எங்கே) மழலை மொழியை கிளிகளுக்கு வழங்கி விட்டாயோ? . மண்ணை விட்டு விண்வெளியில் பறந்து விட்டாயோ? நிழலைப்போல நேருவை நீ தொடர்ந்து விட்டாயோ? நிம்மதியாய் அமரவாழ்வை அடைந்து விட்டாயோ? (எங்கே)