பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/280

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
278


(தொகையறா)
இன்பமோ! துன்பமோ! எதுவுமே நில்லாதே!
இது... இயற்கை நியதி!


பாட்டு


நம் ஜீவியக் கூடு - களிமண் ஓடு!
ஆசையோ-மணல் வீடு!
நம்
ஆசையோ-மணல் வீடு!
சுக வாழ்வு தான் நாடுவோம்!
துயர் சூழ்ந்து நாம் வாடுவோம்!
(நம் ஜீவி)


தவறுகள் அதிகம் செய்வோம்!
தலை விதியென நாம் கொள்வோம்!
சொல்லும்
தைரியம் இழந்து வீணே-
நாம்
சமுக அடிமைகள் ஆவோம்.


(நம் ஜீவி)