பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
284

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா. தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!....(சத்): (பாட்டு) சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..... எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே. உன்னை . இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே! அத்தனையும் தாண்டிக் காலை முன் வையடா!-நீ' அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! (சத்) குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்! நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும்! எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா. அவற்றை எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா!...(சத்) நீலமலைத் திருடன்-1957 K. V, மகாதேவன் էլե வர்: T. M. செளந்தரராஜன்