பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/297

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
297


ஆண் :

சீனத்து ரவிக்கை மேலே
சேலம் பட்டு சரிகைச் சேலே!
ஓரங் கிளிஞ்ச தென்னடி?-எங்குருவிக்காரி
உண்மையைச் சொல்லிப் போடடி!


பெண்:

பானையை எறக்க நானும்
பரணை மேலே ஏறும் போது
ஆணி மாட்டிக் கிழிஞ்சி போச்சுடா!-எங்குருவிக்காரா
அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா!


ஆண் :

மாலை வெயில் டாலடிக்கும்
மாம்பழக்கன்ன நிறம்
மாறிச் சிவந்த தென்னடி?-எங்குருவிக்காரி
மர்மம் விளங்கச் சொல்லடி!


பெண்:

மாலையிட்ட மம்முதனே!
காலையிலே உன்னுடைய
வாண்டுப் பயல் கடிச்சிப் போட்டாண்டா!-எங்குருவிக்காரா
தாண்டியே குதிக்க வேணாண்டா!


ஆண் :

சீவி சினுக்கெடுத்து
சிங்காரிச்சு பூவும் வச்சு
கோயிலுக்குத் தானே போனே?-எங்குருவிக்காரி
கூந்தல் கலைஞ்சதென்னடி?


மருத-18