பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VIII எளிமையாக சொல்லப்போனால் ஒரு சாதாரண பெண்ணிற்கு தொலைக்காட்சியின் விஞ்ஞான சூட்சமம் தெரியாது. அதே சமயம் ரிமோட் கண்ட்ரோல் கருவியில், இந்த நம்பரை அழுத்தினால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி வரும் என்று தெரியும். அந்தத்தாய் எப்படி தாத்பரியங்கள் தடங்கல் ஆகாமல் காட் சிகளை பார்ப்பது போன்றதுதான், எனக்கு ஆன்மீகத் தேடலில் கிடைக்கும் இனிமையும், எளிமையும். இதை விளக்கித்தான் விட்டுக் கணக்கும் ஆகாயக் கணக்கும் என்ற சிறுகதையை எழுதினேன். நான் தேடுவது ஆன்மீகத் தேடலா அல்லது ஒரு விதமான மனோ மாயையா , எ ன்பது என க்கே இன்னும் பிடபடவில்லை . ஆகையால்தான் பனிப்போர் என்ற சிறுகதையை முதல் கதையாக பதிவ செய்திருக்கிறேன். க.பொ. அகத்தியலிங்கமும், திலீப்குமாரும். பெரும்பாலும் இந்தக் கதைகள் பல்வேறு காலக் கட்டங்களில் ஒரு மாறுதலுக்காக எழுதப்பட்டவை. இவற்றிற்கு அடிப்படை பெரும்பாலும் எனது ஆன்மீக அனுபவங்களே. சதங்கையில் வெளியான விட்டுக் கணக்கும் ஆகாயக் கணக்கும் என்ற சிறுகதையை படித்த சீரிய எழுத்தாளர் திலீப்குமார் அவர்கள், அந்த கதையை பாராட்டியதோடு, இதைப் போன்ற வித்தியாசமான கதைகளை ஒரு தொகுப்பாக கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்த பரிந்துரைப்பின் வெளிப்பாடே இந்த சிறுகதைத் தொகுப்பு. ஆன்மீகத் தளத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்படலாம். ஏற்படாமலும் இருக்கலாம். இத்தகைய தனிப்பட்ட அனுபவங்களை, வாசகர்கள் மீது அப்படியே சுமத்துவது நியாயம் அல்ல. சிலசமயம் அனுபவங்கள் மூடநம்பிக்கைகள் போல் தோன்றும். ஒருவேளை அப்படி கூட இருக்கலாம். ஆகையால், இந்தத் தொகுப்பில் தள்ள வேண்டியவை, கொள்ள வேண்டியவை ஆகியவை பற்றி பரிந்துரைக்கும்படி எனது பல்லாண்டு கால இனிய தோழரும், தீக்கதிர் பொறுப்பாசிரியருமான தோழர் சு.போ. அகத்தியலிங்கம் அவர்களிடம் இந்தத் தொகுப்பை கொப்புக் குழைகளோடு கொடுத்தேன். அவர் எவற்றை எல்லாம் வெட்டும்படி கோடிட்டு காட்டினாரோ அவற்றில் சுமார் 90 சதவீத பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டேன்.