பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 87 "சரி, மருமவனே! நான் கண்ண மூடிக்கிட்டு ஒண்ணு செய்வேன். நீ அதே காரியத்த கண்ண திறந்துகிட்டே செய்யனும் ஒன்னாலே முடியுமா?" "என்ன மாமா நீரு? செய்து காட்டும். செய்யுறேனோ, இல்லியான்னு பாரும்!" "கண்டிப்பா?” "கண்டிப்பாவே.. சோளத்தட்டைக்குள்ள ராசாத்தியக் கட்டுறதா வாக்குக் கொடுத்துட்டு அப்புறம் கை விட்டானே மாடக்கண்ணு, அவன் இல்ல நான். ஐயா வேல்சாமி!” "இது என்னடா புது சமாச்சாரம். எந்த ராசாத்தி? எந்த மாடக்கண்ணு?" "அவிய கிடக்கட்டும். நீரு சொன்னத செய்யும்" "சரி, மாமா தோத்துட்டேன்னு வச்சிக்கிடு. எந்த ராசாத்தி!” "நீரு மொதல்ல, கண்ண மூடுமுன்னா மூடும்" கிருஷ்ணன், பாலத்தில் தேங்காய் சிரட்டை மாதிரி இருந்த குழியில் கிடந்த மண்ணை அள்ளி, கண்களை மூடிக்கொண்டு அதை கண் மேல் போட்டார். பிறகு கண்களைத் திறந்து புருவத்தின் மீதும், கன்னங்கள் மீதும் இருந்த மண் துகள்களை துண்டால் துடைத்துவிட்டு கைகளைத் தட்டிக்கொண்டே வேல்சாமியைப் பார்த்தார். அவன் தயங்குவது போலிருந்தது. இப்போது கிருஷ்ணன் விட்ட இடத்தை லட்சுமணன் தொடர்ந்தார்.

பூ. இவ்வளவுதான் ஒன் வைராக்கியமா? பெரிய அரிச்சந்திரன்மாதிரி சபதம் போட்ட!" "யாரு சின்னய்யா. இப்போ மாட்டேன்னது? அதுக்கு வேற ஆளப் பாரும்!” வேல்சாமி, அவர்களுக்கு எதிரே கீழே உட்கார்ந்தான். இரண்டு கைய நிறைய மண்ணை அள்ளிக்கொண்டான்.