பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


88 வாடாத பயிர் கண்களை அகலமாகத் திறந்து வைக்க கன்னத்துச் சதையை கீழ் நோக்கி இழுத்துக்கொண்டான். நெற்றியை மேல் நோக்கிச் சுழித்துக் கொண்டான். கண்களை சுழலாமல் வைத்துக்கொண்டே, கையில் இருந்த மண்ணை எடுத்து சரஞ்சரமாகப் போட்டான். கண் உறுத்துவதையும் பொருட்படுத்தாமல் சர்வ கட்சிகளும் பயன்படுத்தும் ஒரு அரசியல் கோஷத்தை அடிக்கடி கேட்டுப் பழகிய அவன், "இந்த மண்ணு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?" என்று கூட பேசி, அந்த முயற்சியில் வாய்க்குள்ளும் மண்போனது. கண்கள் திறந்திருந்தாலும் அவனால் பார்க்க முடியவில்லை. வலது கையால், இடது கண்ணையும், இடது சாரிக் கையால், வலது சாரிக் கண்ணையும் அவன் கசக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் குரல், ஆவேசமாக ஒலித்தது. "ஒருவன் பைத்தியார தர்மர்னா, இப்படியா துண்டி விடுறது. வெளயாட்டுக்கும் ஒரு வரமுற இல்லியா? ஓங்க அண்ணன் தம்பியள இப்டி பண்ணுனா சம்மதிப்பியளா?” பாலக்காரர்கள், வேல்சாமியின் தங்கையைத் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். விளையாட்டு ஜோரில், அவள் வருவதைப் பார்க்காமல் இருந்துவிட்டார்கள். இப்போது இருக்கமுடியாதது போல் நெளிந்தார்கள். தோளில் மண்வெட்டி தொங்க நின்ற அந்தப்பெண், அண்ணனைப் பார்த்து ஆடிப்போனாள். பிறகு அந்த நால்வரையும் நேராகவும், கூராகவும் பார்த்துக்கொண்டே ஆவேச சக்தியாய் அவள் நின்றபோது, வேல்சாமி தங்கையைச் சாடினான். "ஆம்பிளைங்க பேசிக்கிட்டு இருக்க இடத்துல. ஒனக்கென்னழா வேல. பேசாம வீட்டுக்குப் போ! போன்னா போழா!" 'நீ ஆம்புளமாதிரி நடக்காமப் போனதால, நான் பொம்பளமாதிரி நடக்க முடியாம இவங்க முன்னால நிக்க