பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 வாடாத பயிர் "அவள் கிடக்காள். முதல்ல நம்ம வேலு மச்சானுக்கு கல்யாணம், கருமாந்திரம் ஏதும் இருக்கான்னு ரேகைப் பாத்துச்சொல்லும்." வேல்சாமி ஆவலோடு கேட்டான். "கிருஷ்ண மாமாவுக்கு ரேகை சாஸ்திரம் தெரியுமா?" "இவரைப்பத்தி என்ன மச்சான் நினைச்சே? ஒருவன் இத்தனாம் தேதி சாகனுமுன்னு இவரு சொல்லிட்டா, அத்தனாம் தேதி அவன் சாகாட்டாலும் செத்தவன் மாதிரி தூங்கிக்கிட்டாவது இருப்பான்." "அடடே, அப்படியா! மாமா.. எனக்கும் பாரு மாமா. மாமா... மாமா...” வேல்சாமி, ஆவலோடு நீட்டிய கையை, ஐந்து நிமிடம் உற்றுப் பார்ப்பதுபோல் பாவலா செய்த கிருஷ்ணன், பிறகு, 'இது அற்புதமான கைப்பா! இதோ பாரு. வேல் ரேகை. வேல் இருந்தால் ஞானம் வரும். மாப்பிள்ளை ஞானியாகப் போறான்!” - - "அப்படின்னா. இவருக்கு முருகன் அருள் நிறைய இருக்கோ?” "என்னப்பா அப்படிச் சொல்லிட்டே இடும்பனுக்குப் பிறகு, நம்ம வேல்சாமிதான் முருகனுக்கு நெருக்கமான தோழன். அடேயப்பா! இவன் மயிலும் வேலும் துணைன்னு சொல்லிட்டா போதும், யாரும் எதுர்ல நிக்கமுடியாது. மாப்பிள்ள, கால தொட்டுக் கும்பிடலாம் போலத் தோணுது. இவரு கோபமான ஞானி; ஞானமான கோபி, இப்போ தங்கச்சி மேல கோபமாய் இருக்கார்! என்ன பண்ணப் போறாரோ, மாப்பிள்ள, தங்கச்சிய அடியும் வேண்டாங்கல. ஒம்மகிட்ட அடிபட்டால் சூரன் திருந்தினது மாதிரி அவளும் திருந்துவாள். ஆனால், பிரம்ப வச்சு அடியும். கல்ல எடுக்கப்படாது.