பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 வாடாத பயிர் உடனே லட்சுமணன், அவன் நிஷ்டையிலே நிக்கலப்பா. அதோ அந்த கொழுஞ்சி செடி கருகிப்போய் இருக்கறதை கலக்கத்தோடு பாக்கார். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்னு ராமலிங்கசுவாமி பாடினார். நம்ம வேல்சாமியும், செடி வாடுவதைப் பார்த்து வாடுறான். தப்பு. அவன்னு சொல்லப்படாது. அவரும் வாடுறார். என்றான். அப்படிச் சொல்லிவிட்டு, அவன் மற்றவர் களைப் பார்த்து கண்ணடித்துக் கொள்ளவும் தவறவில்லை. வே ல் சா மி , அ வர் க ளி ட ம் வி ைட .ெ ப ற் று க் கொள்ளாமலே நகர்ந்தான். வள்ளலாரின் வாடிய பயிரை நினைக்க நினைக்க, அவனுக்கு அன்பின் வடிவமைப்பு அழகாகத் தெரிந்தது. எவ்வளவு பெரிய பேரன்புப் பாடல். வயலுக்குப் போனவனுக்கு, அங்கே நின்ற தென்னை மரங்களும், பருத்திச் செடிகளும், தும்பைச் செடியும், புல்லும், பூண்டும் உயிர் ஜீவிகளாக, இதுவரை பார்த்தறியா பரம்பொருள் உயிர்ப்புகளாகத் தோன்றின. நகராத ஜீவிகளான செடி கொடிகளும், மரங்களும், விதையாகி, காயாகி, வெடிப்பாகி, வெடித்தது வீழ்ந்து, வெடிக்கப் பட்டது வாழ்ந்து, மானுடத்தைப் போல் வாழ்க்கைப் பிரவாகத்துள் ஆனந்த நர்த்தனம் புரியும் அவை, தன் மேனிக்குள் அணுக்களாய் அவதாரம் கொண்டது போலவும், தானே அந்தத் தாவரங்களின் இலையிலும், பூவிலும் எல்லா இடத்திலும் அணுக்களாய்ப் போனது போலவும் தோன்றியது. தனிப்பெரும் ஜோதியின் கீற்றுக்களான அவற்றுடன் பேசாமல் பேசிக்கொண்டிருந்த வேல்சாமி, சத்தங்கேட்டு நிமிர்ந்தான். ராமன், கையில் ஒரு கிளியை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தான். அந்தக் கிளி இறக்கைகள் அவன் கையில் சிக்க, கால்களை இறக்கைகள் போல் ஆட்டியது. வேல்சாமி-முன்பு பலருக்குப் பல கிளிகளைப் பிடித்துக்கொடுத்த அதே வேல்சாமி, இப்போது ராமனைப் பார்த்து அழுத்தமாகப் பேசினான். உடுக்கடிக்கும் சிவன்,