பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 97 வேல்சாமி, திருவாசகப் பாடல் ஒன்றை, ஒரு ஒதுவார் மாதிரியே பாடினான். அந்தப் பாட்டின் பரசவத்தில் கூட்டம் அமைதிப்பட்டது. பின்னர் தம்பியும், தங்கையும் நின்ற இடத்திலேயே நிற்கும்படி பேசினான். "பெரியவர்களே! தாய்மார்களே!” "இந்தப் பைத்தியம், எதை உளறப்போகிறதோ என்று நீங்கள் நினைப்பது நியாயத்தான். நான் பைந்தியந்தான். நீங்கள் நினைப்பது மாதிரியான பைத்தியம் அல்ல. ஈஸ்வரனைப் போன்ற பித்தன். சிலுவையில் அறையப்பட்ட இயேசு பீறிட்டு எழுந்தது போன்றவன். ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள்." கூட்டம் அவனோடு ஒன்றியது. ஆனாலும் தம்பியும், தங்கையும் உயிரை கையில் பிடித்திருப்பது போல் நின்றார்கள். வேல்சாமி, கதை சொன்னான். புராணக்கதை. "ஒரு காட்டில், ஒரு முனிவர், பாதி மிருகமாகவும், பாதி மனிதனாகவும் வடிவு கொண்டதாகக் கூறப்படும் நரசிம்ம அவதாரத்தை அப்படியே பார்ப்பதற்காக ஆண்டுக் கணக்கில் தவம் இருந்தார். தவம் பலிக்காமல் இருந்த நேரம். அந்தச் சமயத்தில், ஒரு வேடன் வேட்டையாட வந்தான். அந்த முனிவரைப் பார்த்து, 'சாமி! எதை தேடிக்கிட்டு இங்கே இருக்கிறீக?" என்றான். உடனே அந்த முனிவர், நான் ஒரு மிருகத்தை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார். உடனே இந்த வேடன் பலமாய் சிரித்து விட்டு, 'எனக்குத் தெரியாத மிருகமா? சொல்லுங்கள். அதைக் கட்டிப் பிடித்து கொண்டு வருகிறேன்' என்கிறான். முனிவரோ, மமதையோடு சிரிக்கிறார். வேடன் மீண்டும் வற்புறுத்துகிறான். உடனே அவர், அந்த மிருகம் பாதி மனித வடிவத்திலும், மீதி சிம்ம வடிவத்திலும் இருக்கும். உன்னால் பிடிக்க முடியாது' என்கிறார்." அந்த வேடன் சிறிது அயர்ந்து போகிறான். ஆனாலும் முனிவரிடம் சபதம் போடுகிறான். எப்படியும் இன்று