பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 வாடாத பயிர் மாலைக்குள், அந்த மிருகத்தை உங்கள் முன்னால் கொண்டு வந்து காட்டுகிறேன். அப்படி முடியாது, போனால் நெருப்பை வளர்த்து அதில் உயிர் மாய்க்கிறேன் என்கிறான். வில்லும் அம்புமாய் காட்டுக்குள் சுற்றுகிறான். எல்லா மிருகங்களும் கிடைக்கின்றன. ஆனால் அந்த மிருகத்தை காணவில்லை. இறுதியில் காட்டு விறகில் நெருப்பூட்டி உயிரை மாய்க்கப்போகிற சமயத்தில் - அந்த நரசிம்ம வடிவம் உறுமிக் கொண்டே, அவனை நெருங்குகிறது. இவன், அதன் கழுத்தை கயிற்றால் கட்டி, முனிவரிடம் இழுத்து வருகிறான். இந்த மிருகத்தைப் பாருங்கள் சாமி என்கிறான். முனிவர் கண் விழிக்கிறார். அவருக்கு மனிதக்குரல் கலந்த ஒரு சிம்மக் கர்ஜனை கேட்கிறது. கயிறும் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அந்த மிருகத்தைத்தான் பார்க்க முடியவில்லை. உடனே, ஆகாயத்தில் ஒரு அசரீரி குரல். "ஏ மூட முனிவனே! இன்னும் நீ, நான் என்ற ஆணவத்தை விடவில்லை. ஆனால், இந்த அப்பாவி வேடனோ, என்னை பிடிப்பதற்காக என்னிடமே ஒன்றி விட்டான். ஆகையால் அவன் அன்புப் பிடிக்குள் அகப்பட்டு விட்டேன். இப்போதுகூட, நீ என் குரலைக் கேட்பது, அவனை நீ பார்த்த புண்ணியத்தால்தான்" என்று ஒலித்துவிட்டு, அந்தக்குரல் முடிகிறது. வேல்சாமி கூட்டத்தை அங்கம் அங்கமாகவும், ஒட்டு மொத்தமாகவும் பார்க்கிறான். கூட்டமோ மெய் மறந்து அவன் வாயையே பார்க்கிறது. வேல்சாமி தொடர்கிறான்.' "ஆகையால் பெரியோர்களே! இந்த வேடன் கதைதான் என் கதை." "ஞானம், மூடனுக்கும் வரும். சில மூடர்களாலும் வரும்.” தினமணிக்கதிர் - 1990