பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


100 நித்திய பாலன் நான் டில்லிக்கு, ஜி.டி.யிலேயே போயிருக்கலாம். திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் கான்பரன்ஸ~க்கு, வெள்ளிக்கிழமையே தமிழ் நாட்டில் போக வேண்டியதில்லை. இருந்தாலும், டில்லியில் ஒய்வு கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும், சுரேஷ"டன் கழித்து, களிக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, செகரடேரியட் ஆசாமிகளைப் பார்த்து, கோட்டாவில் டிக்கெட் வாங்கிப் புறப்பட்டேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பத்தாண்டு காலம், அவனைப் பார்க்க வேண்டும் என்று, இப்படிப்பட்ட வேகம், இதுநாள் வரையில் வந்ததில்லை. ரயில் பெட்டியில் ஏறிய பிறகுதான், ரயில் புறப்படாத ஒவ்வொரு விநாடியும், நாடியில்லாத வீண் விநாடியாக எனக்குத் தோன்றியது. ரயில் புறப்பட்டு விட்டது. 'ஜிக்கு புக்கு சத்தம் போடாமல், அருமையான ஓசையுடன், பிரயாணிகளைக் குலுக்காமல், அதே சமயம் தன் பாட்டுக்குக் குலுங்கிய வண்ணம் புறப்பட்ட ரயிலை நினைத்ததும், டில்லி ரயில் நிலையத்திலிருந்து பத்தாண்டுகளுக்கு, முன்பு நான் புறப்பட்ட நிகழ்ச்சி, டெலிவிஷன் போல் கிளியராக வந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு பாரதத்தின் தலை விதியை நிர்ணயிப்பதாலே என்னவோ, தலைவிரிகோலமாக இருந்த டில்லி நகரில் இருந்து, சென்னைக்கு மாற்றப்பட்ட என்னை, வழியனுப்ப ரமேஷ், அவன் பெற்றோர். வயது வந்த அவன் அக்காள், என் நண்பர்கள்- முதலியோர், ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். என் நண்பர்கள் என்னைப் பார்க்காமல், இதர பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 'பயல்கள் என்னை வழியனுப்ப வந்தார்களா அல்லது அந்தச் சாக்கில் முன்பின் அறிமுகமில்லாத பெண்களை வழியனுப்ப வந்தாாகளா என்ற சந்தேகம் எனக்கு வரவில்லை. ரயில் நிலையம் வரைக்கும் எனக்காக