பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 நித்திய பாலன் ரமேஷ், பதிலுக்குக் கைவிரிக்கவில்லை. மாறாக, தன் பஞ்சுக் கைகளை என் கழுத்தைச் சுற்றிக் கொண்டு, "மாட்டேன், மாட்டேன். மாமாவோடத்தான் போவேன். போவேன்." என்று அடம் பிடித்து அழுதபோது, அடம் பிடிக்காமல் அழுத என் கண்ணிர், அவன் முதுகை நனைத்து, அவன் தந்தையின் புறங்கைகளிலும், சிதறியது. 'சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கோ', 'ஒரு வருஷத்துக்கு ஒரு தடவையாவது வாங்கோ", "தடியா மாமி சொன்னாபோல கல்யாணத்துக்கு ஆசைப்பட்டு, ரயிலி லேயே காதலிச்சுடாதே....”, “மெட்ராஸ் வரும்போது கடிதாசு போடுறேன். ஸ்டேஷனுக்கு வா" என்பன போன்ற வார்த்தைகள், அந்தச் சிறுவனுக்கு சந்தேகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ரயில் லேசாக நகரத் தொடங்கியது. ரமேஷின் தந்தை வெங்கட்ராமன் பதற்றப் கேட்டார். நானோ, அவனைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உயிரோடு செத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சினந்த அவன் தந்தை, இடியட். எபில்லி' என்று திட்டிக் கொண்டே, அந்தத் திட்டுக்கு தாளம் போடுவதுபோல், அவன் முதுகில் மொத்து மொத்தென்று மொத்தி, அவனை-என் பிரிய ரமேஷை-பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டு கீழே இறங்கினார். நகரத் தொடங்கிய ரயில், ஒடத் தொடங்கியது. தந்தையின் மார்புக்குள் ஒடுங்கிய ரமேஷ், அவரது கைகளைச் சிறைக் கம்பிகளாக நினைத்து அவற்றை ஒடிக்க நினைத்து, அது முடியாமல் போக, வளைக்க நினைத்தவன் போல், "மாமா மாமா' என்று கத்திக்கொண்டே, இதுவரை யாராலும் அடிபடாத அப்பாவின் தலையை அடித்தான். திமிறினான். துள்ளினான்; துவண்டான்; மருண்டான். மீண்டும் 'மாமா! மாமா' என்று மார்பெல்லாம் கண்ணிராகச் கத்தினான். கதறினான்.