பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


106 நித்திய பாலன் தாண்ட முடியாமல் தடுக்கியவர்கள், பிரமோஷன் காரர்கள், பிரமோஷனுக்காக, சிபார்சுக்கு வந்தவர்கள் என்ற வகையில் 'பக்த குழாமின் வேல் வேல். வெற்றிவேல்' (அதாவது புரபேஷன் முடியட்டும்; பிரமோஷன் வரட்டும்) என்ற முழக்கம். அதனிடையே ஒருசிலர், பற்றற்ற, நிஷ்காமிகளாக, அக்கம் பக்கம் பார்க்காமல் நின்றனர். வேலும் மயிலும் விளங்க, குன்றேறி நின்ற குமரனை, ஊனக் கண்ணை மூடி, ஞானக் கண்ணைத் திறந்தவர்களாய், தன்னை மறந்து, 'தானை மறந்து தரிசித்தனர். இதை ‘என்னை மறக்காத நான், புரிந்து கொண்டேன். பசி கிள்ளவே, அந்த வேகத்தில், இப்போது நிஜமாகவே, அந்தப் பிச்சாண்டியிடம் (சாம்பார், ரசம் சாதம்) பிச்சை கேட்டு, கைகளைப் பண்டாரம் போல் நீட்டிக் குவித்தேன். திடீரென்று, ஒரு பையன் சிரிப்பது கேட்டு, திரும்பிப் பார்த்தேன். அவன் கழுத்துக்கு உத்திராட்ச மாலையைப் போட்டு, கையில் ஒரு வேலைக் கொடுத்துவிட்டால், அவனையே முருகன் என்று சொல்லலாம். அப்படி ஒரு தோரணை நெருப்பு ஜ்வாலையின் நிறம், சந்தனக் குளுமையான கண்கள், சரவணனைப் போன்ற உடல்வாகு. பார்ப்போரைப் பற்றிலாழ்த்தும் பற்றற்ற கண்கள். அந்தப் பையனையே, சிறிது நேரம் கண் கொட்டப் பார்த்துவிட்டு, பிரசாதம் விநியோகிக்கப் படவில்லை என்பது உறுதியானதும், வெறுப்போடு வெளியே வந்தேன். சாதம் கொடுக்காத சண்முகத்தைச் சதமாக நினைக்கக் கூடாது என்ற உணர்வோடு, நடந்த களைப் புத் தீருவதற்காக, வெளியே வந்து உட்கார்ந்த சிறிது நேரத்தில், அதே பையனும், தந்தையும், தாயும், தமக்கையும் புடைசூழ வந்தான். அவர்களைப் பார்த்து ஏதோ சொல்லிவிட்டு, பிறகு என்னைப் பார்த்துவிட்டுச் சிரித்தான். உடனே, அவன் தந்தை "பெரியவங்கள. அப்படி சொல்லப்படாது" என்று சொல்லிக்கொண்டே, என்னைச் சிநேகித பாவத்துடன் பார்த்துச் சிரித்தார். அதில் அரிசிச்சோற்றின் மணம் வீசியது. அந்த அம்மா வீசிய புன்னகையில், நெய்