பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 107 வாடை நெருடியது. எழுந்து அவர்களை நெருங்கினேன். பையன் ஏதோ சொல்லப்போனான். அப்பாக்காரர், அவன் வாயைப் பொத்தினார். பின்னர் அவன் வாயிலிருந்து கைகளை விலக்கியபோது அந்தப் பொடியன், என்னைப் பார்த்து நேரடியாகவே கேட்டான். "மாமா. நீங்க. ஒரே கறுப்பா இருக்கேளே. ஏன்?" அப்பா இடைமறித்தார். "அடிச்சிடுவேன் படுவா. மாமாவ... அப்படில்லாம் பேசப்படாது. இவன் கிறுக்கு பய ஸார். எக்ஸ்கியூஸ் மீ. தப்பா எடுத்துக்காதீங்கோ. டேய் மாமாவுக்கு ஸாரி கொடு." பையன், எனக்கு 'ஸாரி கொடுக்கு முன்னதாகவே, ஒரு வேளை கொடுத்தாலும் கொடுத்து விடுவான் என்று பயந்து "பரவாயில்ல. ஸார். உண்மையைத்தான் சொல்றான். நான் நல்ல நிறமாத்தான் ஸார் வந்தேன். சப்பாத்தி பூசணிக்காய் சாப்பிட்டுச் சாப்பிட்டும் இந்த சம்மர் தாங்க முடியாமயும். கறுப்பாய் போயிட்டேன்." என்றேன். பொடியன் விடவில்லை. "இதுக்கு மேலே. நீங்க.. கறுப்பாக முடியாது. ஏன்னா...” தந்தைக்காரர் அதட்ட, தமக்கை, அவன் காதைப் பிடித்துத் திருக, பத்து மாதம் சுமந்த மாமி, சிரித்துக் கொண்டே, பையனின் சமர்த்தில் பெருமிதப்பட, கறுப்பனான நான், வெள்ளை வெளேரென்ற தும்பைப்பூ நிறத்தாலான அரிசிச் சாதத்தை நினைத்து, சிரிப்பதுபோல, பாவனை செய்ய, அறிமுகங்கள் தொடங்கின. அவரும்- அதுதான் மிஸ்டர் வேங்கடராமனும், என் சித்தப்பாவும் கிளாஸ் மேட்டாம்! இந்தச் சங்கதி தெரிந்ததும், அவர் நீ நான்னு பேசத் தொடங்கி விட்டார். ஒரு சமயம் டா கூடப் போட்டதாக ஞாபகம். நான்