பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 109 கொண்டும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்தேன். இறுதியில் சாப்பாட்டுக் கணக்கு மறந்து, அன்புக் கணக்கு மட்டுமே எஞ்சி நின்றது. ரமேஷ் பள்ளிக்கூடம் செல்லும் நேரம் தவிர, மீதி நேரம் என்னிடமே இருந்தான். என்னிடமே தூங்கினான். நான் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன். அவனை அறிமுகப்படுத்திய உத்திரசுவாமி கோயிலுக்கு அழைத்தப் போவேன். அங்கே, நானும் ஒரு குழந்தையாகி, அந்தக் குழந்தையோடு விளையாடுவேன். அந்தச் சின்னப் பையனின் பெரிய கேள்விகளுக்கு விடை கொடுக்க முடியாமல் திண்டாடிய நாட்களும் உண்டு. குழந்தைகளின் கேள்விகளுக்கு, விடை காண்போர் ஞானியாக மாறலாம் என்பது எவ்வளவு உண்மை! "முருகனுக்கு ஏன் வேல் இருக்கு? முருகனப். பாக்காட்டா வாழ முடியாதா மாமா? முருகனைக் கும் பிடாமல்..... இயேசு கிறிஸ்துவ.... நினைக்கிறவங்களும் நல்லா இருக்காங்களே. ஏன் மாமா? முருகன். உலகம் வரதுக்கு முன்பே. இருக்கான்னு சொல்றேளே அப்படின்னா. அவன். ஏன் பெரியவனா மாறாம. அப்படியே இருக்கான் மாமா? சின்னப் பையனா இருக்கிற முருகனப் போய் ஏன். அப்பா. அப்பான்னு கூப்பிடறேள் மாமா?" ரமேஷின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே, நான் கந்த புராணத்தையும், அருணகிரி நாதரையும் படித்தேன். எனக்கு முருகனைத் தேடுவதை விட ரமேஷின் கேள்விகளுக்கு பதிலளித்து, அந்தப் பதிலில் அவன் திருப்தியுடன் சிரிப்பதைப் பார்ப்பதில் ஒர் திருப்தி, ஆன்மிகம் போகட்டும். மெட்டிரியலினியத்திலும் இதே திருப்திதான். இந்த பூட்ஸ் வாணாம். என்று அம்மாவிடம் அடம் பிடிக்கும் ரமேஷ், இந்த மாமா. டோண் பி சில்லி. இந்த பூட்ஸ் இன்னும ஒரு மாதம் வரைக்கும் போடணும் என்றால், அவன் இரண்டு மாதம் வரைக்கும் போடுவான். பஸ்ஸில் போக மாட்டேன். ,