பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 111 அவளோடு, ஒரிரு முறையேதான் பேசியிருக்கிறேன். ஆனால், அடிக்கடி, தமிழ் வார பத்திரிகைகளை அவளிடம், அவளாகக் கேட்காமல், ரமேஷ் மூலம் கொடுப்பேன். இந்தக் கொடுக்கல் வாங்கல் தவிர, வேறு எந்தவித 'வில்லங்கமும் இல்லை. நான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யத் தெரியாதவன் என்பதோடு, எனக்கும் அவளைவிட அழகான ஓர் அத்தை மகள் காத்திருந்தாள். நான் யோக்கியன். 'டெம்ப்ரரி காதலில் கூட இறங்கவில்லை. இருந்தாலும், மாமி சந்தேகப்படுகிறாள் என்றால் அது பெரிய விஷயம். எனக்கு, அந்த வீடு முள் வீடாகியது. எனினும் அந்த முட்களிடையே இருந்த என் ரமேஷ் ரோஜாவிற்காக, பொறுத்துக் கொண்டேன். ஒரு நாள் அவனிடமே, 'அக்கா கிட்ட..... ஏதாவது மாமா. ... சொல்லச் சொன்னானாடா... சமத்துக்கண்ணு. சொல்லுடா ரமேஷ்"என்றே மாமி கேட்டுவிட்டாளாம். ரமேஷ், இதை என்னிடம் சொன்னான். இதற்கு மேல் இருப்பதும் அநாகரிகம். இதுவரை, சென்னைக்கு மாற்றலாவதற்கு ரமேஷ் பொருட்டு, நான் இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது, நம்மால் பிரச்சினை வேண்டாம் என்று நினைத்து, ஒரு எம்.பி.யிடம் போய் எம்பினேன். சென்னைக்கு டிரான்ஸ்பர் கிடைத்தது. என்னைவிட மாமிதான் அதிக மகிழ்ச்சி அடைந்ததுபோல் தெரிந்தது. "வீட்டில் இருந்தவன் திடீரென்று போகிறானே" என்கிற ஆச்சரிய உணர்வைக் கூட காட்டாத ஆராய்ச்சி மகளின் முகபாவத்தை, விரக்தியாக என்னை பிரியப்போகிற அம்மாக்காரி நினைத்துக் கொண்டாள் போலும்! சென்னைக்கு வந்த பிறகு, முதல் கடிதம் போட்டேன். இரண்டாவது கடிதம் போட்டேன். பதில் வரவில்லை. 'கலங்காதே ரமேஷ்! மாமா ஒன்னை வந்து பார்ப்பேன்’ என்கிற என் கடித வாசகத்தில், ரமேஷ் என்ற