பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 115 பிடிக்குது. குவார்ட்டர்ஸ் பெரிசானதால. எனக்குத் தலையும் புரியல... வாலும் புரியல... உங்களுக்குத் தெரியாதா, "ஸ்மால் இஸ் பியூட்டிபுள்." அன்று முழுக்க, அங்கேயே இருக்க நினைத்த நான், மாமியின் அன்பான வற்புறுத்தலையும் பொருட்படுத்தாது, ஏதோ சாக்கு போக்குச் சொல்லி, வெளியே வந்தேன். முன்பு அரிசிச் சோற்றுக்காக, எந்த வேகத்தில் எந்த ஆற்றாமையில் நடந்தேனோ, அதே வேகத்தில் அதே ஆற்றாமையில் நடந்தேன். ஆனால் இப்போது ஏமாற்றம் என் கால்களுக்கு நங்கூரம் பாய்ச்சுவது போலிருந்தது. இந்த ஏமாற்றம் தாளமுடியாமல் முறையிடுவதற்கோ அல்லது முட்டிக்கொள்வதற்கோ, உத்திரசுவாமி மலைக்கு வேகமாகப் போனேன். ஒருவித உரிமைக் கோபத்தோடு படியேறினேன். பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அதர விரிப்புடன், அந்தச் சிரிப்பின் சக்தியுடன், சித்தி காட்டும் முக்தியுடன், முத்தி காட்டும் மோனத்துடன் முருகன் சிலை காட்சி தருகிறது. “முருகன். உலகம் வரதுக்கு முன்னேயே. இருக்கான்னு சொல்றேளே, அப்படின்னா.... அவன் ஏன் பெரியவனாகாமல் அப்படியே இருக்கான் மாமா?" என்று அன்று ஒர் ஊனக்குழந்தை கேட்ட கேள்விக்கு, இன்று விடை கிடைத்த ஞானப்பரவசத்தால், கும்பிடக்கூட மறந்தவனாய், நிற்கிறேன். தீபாவளி மலர், கல்கி-1978