பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

| 22 அன்னையை மறைத்த சிலை புத்த சமண சமயங்கள் கூறும் நிர்மலமா? நிர்குணமா? கல்லில், கழிவு நீக்கி சிலை எடுப்பது போன்ற மாயை நீங்கிய மனோதளமா? உணர்வு நீங்கிய பேருணர்வா? மனதை அசைத்து தான் மட்டும் அசையாமல் நிற்கும் உணர்வு பீடமா? இவற்றில் எதுதான் பிரக்ஞை? 'ஓம்' என்றால் உண்டு என்று ஒரு பொருள் உண்டு. இப்படி சொல்லிச் சொல்லி அண்டகோடிகளும் உண்டு, பிண்டகோடிகளும் உண்டு என்று அனுமானிப்பது தான் பிரக்ஞையா? ஏகாம்பரம், வழக்கம்போல் சிறிது குழம்பிப்போனார். பட்டறிவு உதவவில்லை ஆனாலும் ஒரு தீர்வுகிடைத்தது. கட்டப்பஞ்சாயத்துத் தீர்வு... ஒளிக்கோடுகளை பிரக்ஞையாக அனுமானிக்கப் போனவர், இப்போது, பிரக்ஞையையே, ஒளியிலான சோதனைக்குழாய் போல் கற்பிதம் செய்துகொண்டார். மீண்டும் குருநாதர் சொன்னதுபோல், இந்தப் பிரக்ஞையையின் அடிவாரத்தில், குண்டளனி சக்தி சூல்கொள்ளும் ஆசன அடிவாரத்தில் மனதைகிடத்த வேண்டும். கண்களில் இருந்து இரண்டு ஒளிக்கோடுகள் பிரக்ஞைக்குழாய் வழியாய் கீழே வந்து மனதை பற்றிக் கொள்வதாக பாவிக்க வேண்டும். பாவித்துக்கொண்டார். ஆனால் இந்த மனதை எப்படி உருவகப்படுத்துவது? பிரக்ஞையில் இருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? பிரக்ஞை அசையா மணியென்றால் மனம் அதன் அசையோசையா? அப்போது அசையா மணியை அடிப்பது எது? அது ஆன்மாவா? இந்த மனதை மகிசாசூரவர்த்தனாய் அனுமானிக்கலாமா? அல்லது முயலகனாக கற்பிதம் செய்யலாமா? இங்கே உருவங்கள் வந்துவிடுகின்றனவே. உருவத்தையும் அருவமாக'பார்க்க வேண்டும் என்பதுதானே குருநாதர் ஆணை. போகட்டும். மனம் என்பது புறம் தீர்மானிக்கும் அகமா? அகம் தீர்மானிக்கும் புறமா? இந்த இரண்டின் கலவையா? அல்லது இரண்டு மூலங்களும்