பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 12S ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லிட்டான் எழுந்திருங்க மச்சான். கடைசில உங்க மகன், என் மகள பூவும் பொட்டு இல்லாம பண்ணிடுவாரோன்னு பயம்மா இருக்கே.” ஏகாம்பரம், அலறியடித்து எழுந்தார். உச்சி முக்கோணம் மறைந்தது. அந்த மறைவே நெருப்பாகி, அவர் உடம்பை எரித்தது. கண்கள், ஒளிக்கோட்டுத் தடங்கல் களாய் பார்வையை மறைத்தன. அவரது ஒரே மகன். அவனைப் பார்ப்பது தன்னை கண்ணாடியில் பார்ப்பது போலவே இருக்கும். ஏகாம்பரம் எழுந்தார். அம்மன் சிலைக்கு எதிரே திருவோடுபோல் இரண்டு கைகளையும் மார்புக்கு முன்னால் நீட்டிக் கொண்டு - "அம்மா. அம்மா." என்று அரற்றினார். கல்கி தீபாவளி மலர் - 1999 e多-Wo.