பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 உபதேசம் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று நான்கு பிரமுகர்கள் காரில் வந்து இறங்கினார்கள். அவர்களை உள்ளூர் மணியக்காரர் வரவேற்றார். ஐந்து பேருமாக, நேராக சாமியாரிடம் வந்தார்கள். நகர்ந்து வந்த மக்கள் வரிசை நிறுத்தப்பட்டது. குறுக்குவழி ஆசாமிகளுக்காக, மக்கள் கூட்டம், நிறுத்தப்பட்டு நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் கார்த்திக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல் ஏற்பட்டது. இங்கேயுமா இன்புளுயன்ஸ்? நால்வரில் ஒருவர், சாமியாரைத் தொட்டுக் கும்பிட்டார். உடனே மணியக்காரர், சாமியாரைப் பார்த்து, "சாe! இவருக்கு. இன்கம்டாக்ஸ் தகராறாம். நீங்கதான் அருள் செய்யனும்" என்றார். உடனே சாமியார், "தீர்த்து வைக்கிறேன்" என்றார். - "இவருடைய மனைவி. மெட்ராஸ்ல வேலை பாக்குறாங்க. இவரையும் மெட்ராஸுக்கு மாத்த. சாமி. அருள் பண்ணணும்." "நல்லது. மாத்தறேன்." "சாமி. இவரு முனிஸிபாலிட்டி சேர்மன். பணத்தைக் கையாடினதா போலீஸ்ல வழக்குப் போட்டிருக்காங்களாம். நீங்கதான்." "நல்லது, கவனிக்கிறேன்." நால்வரும் எந்த வேகத்தில் வந்தார்களோ, அந்த வேகத்தில் போய்விட்டார்கள். கார்த்திக்கு, பக்தர்கள் மீது ஏற்பட்ட கோபம், இப்போது சாமியார் மீது திரும்பியது. 'நல்லது, போய் வாங்க என்ற வார்த்தையைத் தவிர வேறு எதையுமே பேசாத அவர், அந்த நால்வரிடமும் மணியக்காரர் சிபாரிசின் பேரில், என்னமாய்ப் பேசுகிறார்! இவர் எந்தவகைச் சாமியார்? கார்த்தி, பின்னார் நின்றவர்களால் நகர்த்தப்பட்டு சாமியாரின் முன்னால் நிறுத்தப்பட்டான். என்னதான்