பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 131 சாமியாரை நிந்தித்தாலும், அவர் பார்வை பட்டதும், அவனுக்கு ஒருவிதப் பரவசம் ஏற்பட்டது. ஆனால், இந்த முறையும் அவன் கொடுத்த வாழைப்பழத்தை, சாமியார் அவனிடமே திருப்பிக் கொடுத்தார். பலருக்கு நெற்றியில் விபூதியிட்ட அவர் கரங்கள், கார்த்தியை விபூதியை எடுத்துப் பூசிக் கொள்ளுமாறு சைகை செய்தன. கார்த்தி , திருநீறை எடுத்து க் கொள்ள்ளாமலே வெளியேறினான். சாமியாரைத் திகிலுடன் பார்த்தான். சாமியார், மெளனமாக மற்றவர்களுக்கு, திருநூறு அளித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தினர் கார்த்தியை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஏதாவது பயங்கரமான பாவம் செய்திருப்பான்! அதனால்தான் சாமியார் அவனிடம் பழங்களை வாங்கிக் கொள்ளவும் இல்லை; விபூதி கொடுக்கவுமில்லை. வரிசையில் நின்ற ஒவ்வொரு பக்தரும், தன்னையே. பெருமையாகப் பார்த்துக் கொண்டார்கள். அதே நேரத்தில், கார்த்தியை மாதிரி தங்களுக்கும் சாமியார் கையை விரித்து விடுவாரோ என்ற திகிலும் இருந்தது. அதற்கு ஈடு கட்டுவதுபோல், "இந்த மகானுக்கு. இருநூறு வயசிருக்கும். இந்த இடத்திலேயே. முப்பது வருஷமா. இருந்தது இருந்தபடியே இருக்கார். கூடுவிட்டுக் கூடு பாயுற வல்லமை உள்ளவர்” என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். "இங்க. வரும்போதாவது மனசு சுத்தமா இருக்கணும். சாமியார் எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடுவார்” என்றார் ஒருவர்-கார்த்தியை நோட்டம் விட்டுக்கொண்டே கார்த்தி, உடலெல்லாம் பற்றி எரிய சோர்வாக, அருகே இருந்த ஒரு தோப்பில் வந்து உட்கார்ந்தான். அவன் நெஞ்சமெல்லாம் நிராசை வியாபித்தது. இதற்காகவா, இத்தனை கஷ்டப்பட்டு வந்தான்? எல்லாவற்றையும் படைத்து, தன்னையே தானாகப் படைத்துக் கொண்ட இறைவனை பைபிளிலும், குரானிலும், பகவத் கீதையிலும் அவன் தேடிக் கொண்டிருக்கிறான். உண்மையையே கடவுளாக ஆராதிக்கிறான். தெய்வச் சந்நிதிகள் தோறும்