பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 135 இன்னொரு வார்டில் கீழே ஒரு பாயில் புரண்டு கொண்டிருந்தாள் சுந்தரி, அவளுக்குப் பால் வியாபாரம். என்ன நோய் என்று டாக்டர்கள் கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிக்கு ஆயத்தங்கள் செய்யும்போதே, ஒன்றைக் கண்டுபிடித்து விட்டார்கள். மரண நெருக்கத்தை அவளும் புரிந்து கொண்டாள். கட்டிய புருஷன் எட்டிப் பார்க்கவில்லை. பெற்ற பிள்ளைகள், ஒப்புக்கு வந்தார்கள். அவள் அம்மா இருந்தால். அந்த அம்மா, அவள் ஆறு வயதுச் சிறுமியாக இருந்தபோது, எப்படியெல்லாம் முத்தம் கொடுப்பாள்! அந்த அம்மாவை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று அவளும் துடித்தாள். துடித்தவர்களின் இதயத் துடிப்பு அடங்கியது. ஆன்மாக்கள் பிரிந்தன. சுக்கில உடம்போடு, அந்த மூவரும் மேலே போனார்கள். இவர்களோடு, பூமியின் பல பகுதிகளில் ருந்து பல ஆன்மாக்கள் சேர்ந்து கொண்டன. அத்தனை ஆன்மாக்களும் அளவிட முடியாத பிரபஞ்சத்தை அளவெடுப்பதுபோல், பறந்தன. பூமிக்கு மேலே குறிப்பிட்ட வட்டத்திற்கு வந்ததும் பெரும்பாலான ஆன்மாக்கள் அங்கேயே முடங்கின. அதற்கு மேல் அவற்றால் செல்ல முடியவில்லை. ஆனால் தவ வலிமையும், புண்ணிய பலமும் கொண்ட ஆன்மாக்களும், பரம்பொருளை அனுதினமும் மறவாமல் வாழ்ந்தவர்களின் ஆன்மாக்களும், ஒழுக்கத்தை விழுப்பமாகக் கொண்டு, நெறியோடு வாழ்ந்து நேர்மையுடன் சிறந்த நாத்திகவாதிகளின் ஆன்மாக்களும், வைணவர்களால் பூரீ வைகுண்டம் என்றும், சைவர்களால் சிவலோகம், சமன பெளத்தர்களால் நிர்வாணம் என்றும் கூறப்படும் பிரபஞ்ச மையத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. பூமிக்கு மேலே ஒரு கட்டத்தில் தேங்கிப் போன ஆன்மாக்களில், ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் காலமான மூன்று ஆன்மாக்களும் இருந்தன. இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் இடைப்பட்ட அல்லது அவை இரண்டாகக் கலந்த பகுதி அது. அத்தனை ஆன்மாக்களும்