பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 பனிப்போர் இடம் தெரியாத ஒரு இடத்திலிருந்து, உருவம் தெரியாத ஒரு சுகச் சோகமான தென்றல் முகத்தை வருடிக் கொடுக்கிறது. கண்களை ஈரப்படுத்துகிறது. இதை ஒரு தடவை என்னுடைய சைக்யாட்ரிஸ்ட் மைத்துனரிடம் விளையாட்டாகச் சொன்னபோது, அவனோ, "அம்மாவின் பிரிவு உங்கள் அடி மனதில் தேங்கி உங்களுக்கு 'ஃபீலிங்க் ஆப் இன்செக்கூரிட்டி - அதாவது பயப்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது” என்றான். நான் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே, அவனை பயமுறுத்துவது போல் பார்ப்பேன். பக்கத்தின் நின்ற மனைவி கூட இவரா பயப்படுறவரு?. நம்ம பயமுறுத்தாம இருந்தா சரிதான் என்றாள். இந்தக் கடந்த கால நினைப்போடு நின்ற எனக்கு, தலை தரையில் விழுவது போல் துடித்தது. தூங்க வேண்டுமென்று உடல் தன்னை வளைத்துக் கொண்டது. ஆனால், உள்ளமோ தூங்கக்கூடாது என்று என்னுள்ளே சொல்லிச் சொல்லி உடம்பை நிமிர்த்தியது. படுத்த உடனே, தூங்கக்கூடியவன் நான் என் மனைவி &n L. ராமாயணத்துல ராமபிரான் வில்ல ஒடிச்சதுதான் தெரியும். எடுத்தது தெரியாதுன்னு கம்பன் சொன்னது மாதிரி நீங்க தூங்குறதுதான் தெரியுது. படுக்கையில விழுகிறது தெரியல. என்ன ஜென்மமோ என்பாள். நான் துரக்கத்தில் புரள்வதை தப்பாக நினைத்துக்கொண்டு, நான் ஒன்றும் தப்பான அர்த்தத்துல சொல்லலே என்று தோளில் கையைப் போட்டுக் கொண்டு அவள் சொல்வது லேசாய் ஒளிக்கும். ஆனாலும் இந்த தூக்க சுகத்தை விட, அந்த 'சுகம் எனக்கு பெரிதாய் பட்டதில்லை. அதை ஈடுகட்ட பகலில் அவளிடம் பல்லைக் காட்டுவேன். அவள் பார்க்கும் பார்வையிலேயே வாயை மூடிக்கொள்வேன். இல்லை யானால் அந்தப் பற்களை அவளே கிள்ளியெறிந்து வெளியே போட்டிருப்பாள். அப்படிப்பட்ட எனக்கு,