பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 அம்மாவைத் தேடி. ஆனாலும் அந்த திசையற்ற பயணத்தில் சொர்க்கம் என்றோ, நரகம் என்றோ இருக்கமுடியாது என்று அனுமானித்தவை போல் சில பத்தாம் பசலியற்ற ஆன்மாக்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. திடீரென்று, அவர்கள் முன்பு ஒரு ஜோதி. குடில்லாத நெருப்புப் பிரவாகம், குளிருக்கு இதமான ஜோதி. அடிமுடி தெரியாத ஒளிவடிவம். காலமற்ற காலஜோதி. அதில், கோடி கோடி அண்டங்களும், அந்த அண்டங்களில் கோடாதி கோடி சூரியன்களும், பேரண்டங்களும் மின்னின. அண்டங்கள் ஆடின. பேரண்டங்கள் குலுங்கின. அதன் பிரபஞ்சமார்பில் கருணை சமுத்திரங்கள் சுரந்தன. சூனியமும், சூட்சியமும் கொண்டது போன்ற பேரொளி. அண்டங்களை உருவாக்கியும், அவை அத்தனையையும் ஒரு அனுப்பிண்டத்தில் அடைத்து வைத்தும், பிரபஞ்ச நடனமாகவும் மெளடீகமாகவும், தோற்றம் காட்டும் ஜோதி. அருட்பெருஞ்ஜோதி, ஆதியோ ஆந்தமோ அற்ற ஜோதி. இதன் அருமை புரியாது, அத்தனை ஆன்மாக்களும் "அம்மா வேண்டும். என் அம்மா வேண்டும்..” என்று தனித்தனியாய் கூக்குரலிட்டன. அவ்வளவுதான். அந்த ஒளிப்பிரவாகம், டெப்டி கலெக்டரும் ஏழு வயதுப் பையனுமான மாஜி மயில்நாதனுக்கு, கிராமத்துப் பெண்ணாக அவர் அம்மாவைப்போல் காட்சியளித்தது. மாஜி மிராசுதார் தங்கச்சாமிக்கு, தடயம் போட்ட தாயாகக் காட்டியது. பால்கார சுந்தரிக்கு, மீன்காரப் பூவம்மாவானது. அத்தனை ஆன்மாக்களுக்கும் அவரவர் தாய்போல் காட்சியளித்தது. ஆன்மாக்கள் முண்டியடித்து, தத்தம் அன்னையரை நெருங்கின. ஒவ்வோர் ஆன்மாவும், தன் அன்னை ஒருத்திதான், அங்கே இருப்பதுபோல் நினைத்து நெருங்க நெருங்க, அந்த அகிலாண்ட ஜோதி, ஆணோ, பெண்ணோ, அலியேர், ஒளியோ வெளியோ, அதுவோ,