பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 வீட்டுக் கணக்கும். ஆகாயக் கணக்கும். ஒரு சக்தி இருக்கலாம். ஆனால் இப்படி வேலும் மயிலுமாய் ரெண்டு பொண்டாட்டிகளோட ஒரு கடவுள் இருக்க முடியாது. இருக்கவும் கூடாதுணி என்கிறாள். முடியாது என்றபோது முகத்தை இறுக்குகிறாள். குலதெய்வமான உதிரமாடன் கோவிலில் பூக்காட்டிப் பார்த்தபிறகே திருமணத்திற்கு இணங்கிய பெற்றோரின் பிள்ளையான புது மாப்பிள்ளை, பேத்தியைத் திட்டிவிடக் கூடாதே என்பதற்காக, பாட்டிதான், கோலவடிவின் காதைத் திருகிய படியே திட்டித் திட்டிக் கத்தினாள். பேர மாப்பிள்ளையைப் பார்த்து, "எல்லா விஷயத்துலயும் கெட்டிக்காரி. ஆனால் இந்த கோவில் சங்கதில மட்டும் இவள் கூறு கெட்ட கூவை. சின்ன வயசுல இருந்தே இவளுக்கு சாமிங்கன்னா வேப்பங்காய். போகப் போக இவள சரியாக்கிடலாம்” என்று மன்றாடாத குறையாய், மாப்பிள்ளை முறுக்கை மனதில் கொண்டு, விண்ணப்பித்தாள். அப்போதும் கோலவடிவு விடவில்லை! “திருத்தணுமுன்னு வந்தால் நான்தான் திருத்தணும். இவர்தான் திருந்தணும்" என்றாள். என்றாலும் பாட்டியின் வற்புறுத்தலில் இவள், பொன்னம்பலத்துடன் போனாள். கோவிலின் கருவறைக்கு முன்னால் பக்கவாட்டில் மனைவியுடன் நின்ற பொன்னம்பலம் வடிவேலனைக் கோபித்துக் கொண்டார். படித்த பெண். அதுவும் பெளதிகப் பட்டதாரி. பி.எஸ்.ஸி. பி.டி. பள்ளிக்கூடத்து ஆசிரியை. எல்லா ஆசிரியைகளையும் மாதிரி, கிணற்றுத் தவளையாகவும் இருப்பாள், கைநிறைய சம்பளமும் வாங்குவாள் என்று நம்ப வச்சு, கழுத்த அறுத்திட்டியேடா முருகா! இது எதுல போய் நிற்கப் போகுதோ? இதோட நிற்கட்டும் முருகா இதோட. பொன்னம்பலம் முன்நிகழ்வுகளை உதறிவிட்டு கோலவடிவு மீதான பார்வையை, அவள் வாய்ப் பக்கம் கொண்டு வந்தார். அந்த வாய் அன்று பேசிய