பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 வீட்டுக் கணக்கும். ஆகாயக் கணக்கும். தொங்கினார்கள். சுவர் முனைகளில் ஒன்றில் திருப்பதி ஏழுமலையான், மறு முனையில் சரஸ்வதி அம்மன், கருஞ்சிலையும் வீணையுமாய் தோன்றும் கலைவாணி, நகைப்பெட்டியின் ஒரு விளிம்பில் சின்னஞ்சிறு பிள்ளையார்பட்டி பிள்ளையார் படம். இன்னொரு விளிம்பில் எருமைத் தலையில் கால் பதித்த துர்காதேவி. நடுவில் சேவலை முன்னிறுத்திய இன்னொரு முருகப்படம். அந்தப் படங்களை கிண்டலும், கேலியுமாகத்தான், 'பொன்னம்பலம் பார்த்தார். அந்தப் படங்களின் புராணக் கதைகளை முகம் சுழித்து நினைவுபடுத்தினார். ஏவுகணைக் காலத்தில் வேல்பிடித்த முருகனா. அணுவாயுத காலத்தில் திரிசூல நாயகியா. தாயைப் போல் பெண் கேட்ட பிள்ளையார். எந்தப்படத்தை முதலில் எடுக்கலாம்? பொன்னம்பலத்தின் கரங்கள் இரண்டும் இடுக்கிகளாகி முருகப் படத்தை கெளவப் போயின. ஆனாலும் பாம்பாய் நீண்ட கரங்கள், 'கெளவ மறுத்தன. கையாடி காலாடி, அவர் உடலெல்லாம் ஆடியது. மனசாட்சி ஆடி <冕母ஆட்டுவித்தது. முப்பதாண்டு கால சிநேகிதப்படங்கள். அவரிடம் பேசாமல் பேசியவை. இவர், அந்தரங்கமாய் உரையாடிய படங்கள். சாதாரண சட்டம் போட்ட படங்கள் அல்ல. கடல்போல், மலைபோல், செம்மாந்து திகழ்பவை. பொன்னம்பலம், தன்னை தேற்றிக் கொண்டார். இந்தப் படங்களை எடுக்க ஏற்படும் தயக்கம், முப்பதாண்டு கால மன மயக்கத்தின் பின்விளைவு. சிறைச்சாலையில் இருந்து விடுதலை அடைகிற கைதி, அவனது கொட்டடியையும், கூட இருப்பவர்களையும் எப்படி கால் நகர்த்தாமல் பார்ப்பானோ. கண்ணலம்ப, நோக்குவானோ- அப்படிப் பட்ட தயக்கம். அனாலும் அவன் மீண்டும் அந்த கொட்டடிக்குப் போகமாட்டான். அவனுக்காவது, அது, ஊன விடுதலை. இவருக்கோ. ஞான விடுதலை.