பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 149 இந்த இரண்டுமற்ற ஏதோ ஒன்று, அந்த சவ்வாது மலைக்குச் சாபமிடுகிறது. அவரை, அந்த மலைப்பகுதிக்கு மனோ வேகத்தில் அனுப்பி வைக்கிறது. அங்கு ஏற்பட்ட அனுபவ நிகழ்ச்சிகளை இழுத்துக் கொண்டு திரும்ப அழைத்துக் கொண்டு வருகிறது. நெஞ்சைச் சாடும் நினைவுச் சாம்பல்களை உயிர்ப்பிக்கிறது. பொன்னம்பலம், அரசுப் பணிமுறையில், காவலூர் விண்மீன்கள் ஆய்வு மையத்திற்குச் சென்றார். வேலூருக்கு மேற்கே நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சவ்வாது மலைப்பகுதியில் உள்ள இந்த நிலையத்தின் நிதி நில்லை பற்றி ஆய்வு செய்ய அனுப்பப்பட்டார். கொடைக்கானல் போல் கொடுரமான பள்ளத்தாக்குகளையோ, நீலகிரி மலைபோல் ஊசிவளைவுகளால் பூச்சாண்டி காட்டாமல், சமவெளி போலான மலைவெளி. சின்னச் சின்ன ஓணான் செடிப்புதர்கள். தேக்குமரங்கள் வெட்டப்பட்டு, இப்போது அவற்றின் வேர்களும் தோண்டப்பட்ட குழிகள், குயில்களின் பதுங்கும் பொந்துகளான மலைமுகடு, காட்டில் தொலைந்துபோன மலைக்கிராமங்கள். குளிராமலும், வெம்பாமலும் நிதானப்பட்ட வெப்பநிலை. ஆங்காங்கே வனத்துறையின் பெண்காவலர்கள், குறிப்பாக மலைஜாதி இளம்பெண்களின் கண்களில் கராத்தே பார்வை. நாயைப் போன்ற கீரிகளின் நடமாட்டமும், கழுதைப் புலியைப் போன்ற செந்நாய்களின் குவியல்களும், மண்டிக் கொண்ட இடம். மற்றபடி எந்தவித கொடுங்கோன்மையும் இல்லாத கன்னிமை கழிந்தாலும், இன்னும் கற்பழிக்கப்படாத மலைத்தொகுதி. பொன்னம்பலம், மகேந்திரா ஜீப்பில் போய் சேர்ந்தபோது இருட்டி விட்டது. அந்த நிலையம் ஒரே இருள் மயக்கத்தில் கிடந்தது. குடியிருப்பு வீடுகளில்கூட