பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 வீட்டுக் கணக்கும். ஆகாயக் கணக்கும். நட்சத்திரங்களை, உடனடியாய் உள்வாங்க முடியாது. இங்கே இருளைப் பார்த்து பழக்கப்படும் மனிதக் கண்களுக்கு, நட்சத்திரங்கள் உள்ளது உள்ளபடியாய் தெரியுது." "கொஞ்சம் விளக்கமாய் - என் சிற்றறிவுக்கு ஏற்ற வகையில்." "என் சிற்றறிவுக்கு ஏற்ற வகையில்தான் என்னால் சொல்ல முடியும்." "மன்னிக்கணும். இந்த ஆகாய விஞ்ஞானத்தில் நான் ஒரு பாமரன். இப்ப கூட அமாவாசை எப்படி வருது. பெளர்ணமி எப்படி வருதுன்னு துல்லியமாய் தெரியாது. அதனால.” 'புரியும்படியாய் சொல்ல முயற்சிக்கேன். மனிதனுடைய கண்களின் கொள்ளுமானத்தில் ஆறாயிரம் நட்சத்திரங்கள் அகப்படும். அதோ வலது பக்கம் ஸ்பியராய்-அதான் செவ்வக உருளையா தோணுதே, அது நம் மில்கி கேலேக்ஸியில் ஒரு கை. அதோ தெரியுதே அது இன்னொரு கை, பிரபஞ்ச சாகரத்தில் ஒரு துளியான நமது சூரியன், அந்த பால்வழி அண்டத்தில் உள்ள கோடிக் கணக்கான நட்சத்திரங்களில் ஒரு சராசரி நட்சத்திரம். ஒளியின் வேகம், விநாடிக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் மைல். சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர நாலரை நிமிடங்கள். இப்படி பல்வேறு நட்சத்திரங்களில் வெளிப்படும் ஒளி. நமது பூமிய எட்டுவதற்கு கோடி கோடி ஆண்டுகளும் எடுத்துக் கொள்கின்றன. இவை ஒளி ஆண்டுகள். அதாவது விநாடிக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் கிலோ மீட்டர் என்பது ஆகாயத்தில் ஒரு குறைந்த பட்ச தூரம். இதுவே அறுபது விநாடிகளில் அறுபது தடவை ஊடுருவி, இருபத்து நான்கு மணிகளில், பயணமாகி, அந்தப் பயணம்,